முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையின் உத்தரவை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினர், நேற்றைய தினம் வியாழக்கிழமை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அதன் போது வீதியால் வந்த டிப்பர் வாகனம் ஒன்றினை சோதனை நடவடிக்கைக்காக மறித்த வேளை உத்தரவை மீறி தொடர்ந்து டிப்பர் பயணித்தமையால் , பொலிஸ் விசேட அதிரடி படையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அதில் டிப்பரின் சில்லில் துப்பாக்கி சூடு பட்டமையால் , டிப்பர் தொடர்ந்து பயணிக்க முடியாமல் வீதியில் நின்றவேளை , டிப்பர் சாரதியை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
டிப்பர் வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் எவையும் மீட்கப்படவில்லை எனவும் , கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments