முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு செம்மலையை சேர்ந்த, 54 வயதான நாகராசா யோகராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்துக்கு உள்ளான இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யோகராசா யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
குமுழமுனை பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்மலையிலிருந்து தண்ணிமுறிப்பு வயல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அளம்பில் சந்திக்கு அருகே எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
No comments