வட்டுக்கோட்டை இளைஞனை சித்திரவதைக்கு உற்படுத்தியே படுகொலை செய்துள்ளனர் என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் சென்று விட்டு , வீடு திரும்பி கொண்டிருந்த கணவன் மனைவியை பொன்னாலை பாலத்திற்கு அருகில் இரு வாகனங்களில் காத்திருந்த வன்முறை கும்பல் கடத்தி சென்று , கணவனை தாக்கி படுகாயங்களை ஏற்படுத்திய நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக வீசி சென்று இருந்தனர். மனைவியை சித்தங்கேணி பகுதியில் வீதியில் இறக்கி விட்டு தப்பி சென்று இருந்தனர்.
படுகாயங்களுடன் வீசப்பட்ட இளைஞனை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.
அதன் போது , இளைஞனின் உடல்களில் வெட்டு காயங்கள் , கூரிய ஆயுதங்களால் குத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிய காயங்களாலும், மூச்சு குழாய்க்குள் இரத்தம் சென்றதாலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் இளைஞனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
No comments