வடக்கு மாகாணத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்திய துணைத் தூதரகத்தினால், நேற்றைய தினம் சனிக்கிழமை அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
பேசாலை மற்றும் வெள்ளாங்குளம் , துனுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்து100 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழிற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் "Neighborhood First" என்ற கொள்கையை பிரதிபலிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.













No comments