கிளிநொச்சி ஊடகவியலாளரை இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை வானில் வந்த கும்பல் ஒன்று கடத்த முயற்சித்துள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான மு.தமிழ்செல்வனை வானில் வந்த நபர்கள் கடத்த முயற்சித்த வேளை , அவர் தப்பி செல்ல முற்பட்ட வேளை , வானில் வந்த கும்பல் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த ஊடகவியலாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments