Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். இந்து மணப்பெண் அலங்கார பயிற்சி


யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி இந்து மணப்பெண் அலங்கார பயிற்சி பட்டறையை நடத்தவுள்ளதாக அழகு கலை நிபுணர் அனுஷா ராஜமோகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்.

அழகு கலைத்துறைக்கு பெண்கள் வருவதில் பல சாவல்கள் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர். தற்போது பலர் சவால்களுக்கு மத்தியில், அழகு கலை துறைக்கு வந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள அழகுக்கலைக்கு பயன்படுத்தப்படும் கிறீம்கள் உள்ளிட்ட அழகுசாதன பொருட்கள்  மற்றும் அழகுக்கலை நிபுணர்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் உரிய முறையில் அமுல் படுத்தப்படவில்லை.  இதனால் பாவணையாளர்களாக இருக்கும் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்

இவ்வாறான நிலையில் தற்போது, மாஸ்ட்ர் கிளாஸ் என பலரும் பயற்சி பட்டறைகளை தற்போது நடத்துகின்றனர். ஒரு மாஸ்டர் கிளாஸ்க்கு போனவர்கள் தம்மை அழகுக்கலை நிபுணர்கள் என கூறிக்கொள்கின்றனர். அவ்வாறு ஒரு அழகுக்கலை பயிற்சிக்கு சென்று விட்டு அவ்வாறு கூறமுடியாது.

அழகுக்கலை நிபணர்களுக்கு என தற்போது தொழில் தகமை இருக்கிறது. அந்த தகமையை அடைய வேண்டும்.

எனவே தான் நாம் வடக்கில் உள்ள அழகுக்கலை துறையை மேம்படுத்தும் நோக்குடன் முதல் கட்டமாக இந்து மணப்பெண் அலங்கார பயற்சி பட்டறையை எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி காலை 10 மணி முதல் மாலை 04 மணி வரையில் ரில்கோ விருந்தினர் விடுதியில் நடாத்தவுள்ளோம்.

இந்த பயிற்சி பட்டறையில் தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கவுள்ளோம்.

தொடர்ந்து வரும் காலங்களில் தொழில் முறையான மொடலிங் பயிற்சியையும் வழங்க திட்டமிட்டுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் ரில்கோ சிற்றி ஹோட்டல் முகாமைத்துவ பணிப்பாளர் தி. திலகராஜ் மற்றும் அழகுக்கலை நிபுணரும் மொடலுமான சாரா சுந்தர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்


 

No comments