பொரளை, சஹஸ்புரவில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கி சூட்டில் ஐந்து இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இரு இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வரும் மேலும் மூன்று இளைஞர்களில் இருவரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
No comments