யாழ்ப்பாணம் , மீசாலை - தட்டாங்குளம் வீதியை புனரமைக்குமாறு உத்தரவிடக்கோரி கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த வீதியானது, 60 வருடங்களாக புனரமைக்கபடாமல் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டு வரும் மீசாலை தட்டாங்குளம் வீதியை புணரமைக்குமாறு உத்தரவிடக்கோரி கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வீதி புணரமைக்கப்படாமையால் பாதிக்கப்படுபவர்கள் சார்பில் குறித்த வீதியில் வசித்துவரும் வி.வாகீசனால் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கின் பிரதிவாதிகளான சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோருடை பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு மன்றில் அழைத்திருந்த போது எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.






No comments