கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் தனியார் ஒருவர் பதுக்கி வைத்திருந்த 1220 லிட்டர் பெட்ரோல் மற்றும் 530 லீற்றர் டீசல் என்பன மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சுற்றிவளைப்பு மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிஸார், குறித்த எரிபொருளை பறிமுதல் செய்துள்ளதுடன் குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர் மற்றும் தடயப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.







No comments