யாழ் . போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவிய இரத்தத்திற்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக யாழ். மாவட்ட இராணுவத்தினரால் இரத்த தானம் செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.சில்வாவின் தலைமையில் , பலாலி இராணுவ வைத்தியசாலை வைத்தியர் பி.எல்.ஏ.ஏ. லெகாம்கேயின் ஒழுங்கமைப்பில் இராணுவத்தினர் இரத்த தானம் செய்தனர்.
இரத்த தானம் செய்வதற்காக 191 இராணுவத்தினர் பதிவு செய்த நிலையில் , 185 பேர் இரத்த தானம் வழங்கினர்















No comments