பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் , அவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு பணித்துள்ளார்.
கடற்தொழிலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் கடற்றொழில்அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கவனத்திற்கு தகவல் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அமைச்சர் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகமிடம் தொடர்பு கொண்டு தேடுதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், விமானப்படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தியும் கடற்பரப்பில் விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், அண்டை நாடுகளின் கடற் பாதுகாப்பு பிரிவுகளுக்கும் காணாமல் போன மீனவர்கள் தொடர்பான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச மட்டத்திலும் தேடுதல் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
காணாமல் போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என கடற்படையினருக்கும், சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அமைச்சர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.









No comments