Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். வெசாக் வலயம்


யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சூயிரல் ஜெனரல் சாய் முரளி ஆகியோர் இணைந்து உத்தியோகபூர்வமாக ஒளிரச் செய்தனர். 

இதனையடுத்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'தன்சல்' நிகழ்வும் அதிதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாகவிகாரையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வுகளில் நாகவிகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பிற மதத் தலைவர்கள், யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், வட பிராந்தியக் கடற்படை கட்டளைத் தளபதி, பலாலி விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் செயலாளர்கள், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும், இந்த நிகழ்வில் வெசாக் அலங்காரப் போட்டிகளில் மிகச் சிறந்த வடிவமைப்புக்காக முதல் மூன்று இடங்களைக் கைப்பற்றிய இராணுவப் படைப்பிரிவுகளுக்கு ஆளுநர் உள்ளிட்ட அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









No comments