இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் உண்டு உயிர் வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினரால் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பொதுச் சந்தை கட்டடம் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது.
இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் அங்கத்தவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.













No comments