Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பாடசாலையில் கெட்ட வார்த்தை பேசியதற்கு வாயில் சூடு வைத்த தந்தை கைது


மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் 8 வயது சிறுவனின்  வாயில் இரும்புக் கம்பியால் சூடு வைத்த தந்தையை சந்திவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் 8 வயது சிறுவன் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த சிறுவனின் பெற்றோரிடம் ஆசிரியர் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுவனின் தந்தை, மகனின் வாயில் இரும்புக் கம்பியால் சூடு வைத்துள்ளார்.

சிறுவனிடத்தில் அவனது தந்தை நடந்துகொண்ட விதத்தை அறிந்த அப்பகுதி கிராம உத்தியோகத்தர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து, பொலிஸார் சிறுவனுக்கு சூடுவைத்த தந்தையை கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

மேலதிக விசாரணைகளில் சந்திவெளி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments