Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அனலைதீவுக்கு கடற்படையின் விசேட படகில் எடுத்து செல்லப்பட்ட பேருந்து


அனலைதீவுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று கடற்படையின் சிறப்பு படகில் எடுத்து செல்லப்பட்டு , அப்பகுதியில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள கடல் கடந்த தீவுகளில் ஒன்றான அனலைதீவு பகுதி மக்களின் போக்குவரத்திற்காக பேருந்து ஒன்றினை வழங்குமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர் 

அதன் அடிப்படையில் , இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கடற்படையினரின் விசேட படகு மூலம் அனலைதீவு பகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது 

குறித்த பேருந்து , அனலைதீவுக்குள் போக்குவரத்தில் ஈடுபடவுள்ளமையால் , அப்பகுதி மக்களின் நாளாந்த பயணங்கள் இலகுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments