Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

"வீடற்றவர்களுக்கு வீடு " - யாழில்.2030ஆம் ஆண்டுக்குள் வீட்டுத் திட்டம் பூர்த்தி செய்யப்படும்


யாழ்ப்பாணத்தில் 3ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட வீட்டு திட்ட தேவையுடையோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்."வீடற்றவர்களுக்கு வீடு " என்ற எமது அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் அவர்களுக்கான வீட்டு திட்டங்களை 2030 ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்து கொடுப்பம் என வீடமைப்பு நிர்மாணிப்பு பிரதி அமைச்சர்  டீ.பி சரத் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும் 2025ஆம் ஆண்டு வீடமைப்பு வழங்கப்பட்டவர்களுக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வும்  நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினுடைய கொள்கைகளில் ஒன்று வீடற்றவர்களுக்கு வீடு வழங்குவதாகும் எனவும், அந்த வகையில் யுத்தத்தால் பல வருடங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் போயுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தாய், தந்தை, கணவன், மனைவியை இழந்தவர்கள் வாழ்கின்றனர், அவர்களுக்கு வீட்டு திட்டம் வழங்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. 

அவ்வாறாக  3600 மேற்பட்ட குடும்பங்கள், அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் தவிரவும்,  வீட்டுத் தேவைப்பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் காணப்படுகின்றனர், அவர்களின் பெயர்களையும் சேர்க்க வேண்டிய தேவை காணப்படுகிறது.எதிர்காலத்தில் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்படும் 

மேலும், 2018 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாசாவினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக வழங்கப்பட்ட வீட்டு திட்டங்களில் பல பூர்த்தி செய்யப்படாத வீடுகளாக காணப்படுகிறது, அவற்றை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

அவ்வாறு 3815 வீடுகள் இன்னும் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது.

மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட போது, அங்குள்ள மக்கள் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்கின்றனர். அவர்களுடைய வாழ்க்கை மாற்றப்பட வேண்டும்.

2030 இல்  யாழ்ப்பாணத்தில் வீட்டுத்திட்டங்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய தயாராக உள்ளோம்.

வடக்கு தெற்கை இணைப்பதற்கான பாலமாக இக் காலம் அமைந்துள்ளது, மக்களின்  தேவைகளாக குறிப்பாக கல்வி, நீர், போக்குவரத்து, பாதுகாப்பு போன்றன காணப்படுகிறது. அவற்றை முன்னுரிமை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் 

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு மற்றும் அஸ்வெசும கொடுப்பனவு இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும். 

மாற்றுத்திறனாளிகளுக்கு 10,000.00 ரூபாய் கொடுப்பனவும்,பெண் பிள்ளைகளுக்கான சுகாதார பொதி இவ் வருடம் வழங்கப்படவுள்ளது. 

அத்துடன் விவசாயம் மீன்பிடிக்கு மானியம் வழங்கப்படவுள்ளது, மந்த வளர்ச்சி உள்ள பிள்ளைகளுக்கு 50,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அதேபோன்று மகாபொல கொடுப்பனவு ரூபா 5000.00 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது.

இக்கொடுப்பனவுகள் பிரதேச செயலாளர்களுக்கு ஒதுக்கீடுகளாக வழங்கப்படும், வீதிகள் அமைத்தல், கட்டங்கள் அமைத்தல் போன்றதான திட்டங்களுடன் கிராமிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளது.

இன்னுமொரு யுத்தத்திற்கு இனி இடமளிக்க போவதில்லை, சகோதரத்துவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று வருட காலத்திற்குள் வீடு, கட்டுமானங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் 

 தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றுபட்டு அழகான நாட்டை உருவாக்க வேண்டும் என மேலும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்

No comments