Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்


யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக  இம் மாதம் - ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தி வீடுகள், பாடசாலைகள், தனியார், உயர்கல்வி நிறுவனங்கள், வர்த்தக  நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முழுமையாக சிரமதானப்பணிகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.   யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்திலையே அவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. மேலும் இக் கூட்டத்தில், 

பிரதேச செயலாளர் தலைமையில் செயலக டெங்கு கட்டுப்பாட்டுக் கூட்டத்தை இந்த வாரம் / அடுத்த வாரத்துக்குள் நடாத்துமாறும் கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டு செயலணிக் கூட்டத்தை கிராம அலுவலர் தலைமையில் உடனடியாக நடாத்தப்பட்டு சிரமதானப்பணிகள் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

டெங்குக்கட்டுப்பாட்டுக்குழு  ஜூலை 13ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதிக்குள் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு திடீர் களப்பணி மேற்கொண்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். விழிப்புணர்வு வாரத்தினை இம் மாதம் - ஜூலை 13ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை  நடாத்துவது எனவும், அந்தவகையில் ஜூலை 13ஆம் திகதி  சகல வணக்கஸ்தலங்களிலும், 14ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும்,  15 ஆம் திகதி பாடசாலைகளிலும்  தனியார், உயர்கல்வி நிறுவனங்களிலும் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. வி.பி.எஸ்.டி.பத்திரண, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள்,  சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர்கள், கடற்படை, இராணுவ அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments