Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு - ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு


நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு - ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு - கெளரவ கடற்றொழில் அமைச்சர் 

சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் எம்.ஏ.எல்.எஸ்.என்.கே. சம்பத் மந்திரிநாயக்க ஆகியோர் நிகழ்நிலை ஊடாகக் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலில், கடற்றொழில், அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,

நெடுந்தீவு மக்களின் நீண்டகால கடற்போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், புதிய படகொன்றைக் கொள்வனவு செய்வதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது.

குறித்த திட்டத்தை விரைவாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனுமதிகள், தொழில்நுட்ப நடவடிக்கைகள் மற்றும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் தொடர்பில் ஆராய்வதற்காகவே இக் கலந்துரையாடல் 

நெடுந்தீவிற்கான புதிய படகு கொள்வனவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம், அப்பகுதி மக்களின் பயணிகள் கடற்போக்குவரத்து மேலும் இலகுபடுத்தப்படும் 

அத்துடன், நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் கூடிய கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

No comments