வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகளை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவித்து, வழங்குவதை விரைவுபடுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
தேசிய பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடையவர்களின் பணியாகும்
அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியும், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது குறித்து உடனடியாக இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
அவசியமான காணி அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தின் அவசியம் தொடர்பிலும் , கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்









No comments