Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் கீழ் 199 வேலை திட்டங்கள் முன்னெடுப்பு


வடமாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்கள் ஊடாக தற்போது 199 வேலைத்திட்டங்கள் 488.169 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை விரைவுபடுத்தி, எதிர்பார்க்கப்படும் பயன்களை மக்களுக்கு விரைவாகக் கொண்டு சேர்க்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தில் மகளிர் விவகார அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள தொழிற்துறைத் திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு ஆகியவற்றின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற போதே  ஆளுநர் இவ்வாறு அறிவுறுத்தினார்.

அது தொடர்பில் ஆளுநர் தெரிவிக்கையில், 

அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்கள் ஊடாக தற்போது 199 வேலைத்திட்டங்கள் 488.169 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

ஒவ்வொரு திட்டமும் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்யப்பட்டு, அதன் பயன் மக்களைச் சென்றடைவது முக்கியம். திட்டங்களை முன்னெடுப்பதில் ஏற்படும் தடைகளை உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உடனடியாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடிதங்களை அனுப்பி வைத்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்காகக் காத்திருப்பதைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தி, தேவையான முடிவுகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் 

அத்துடன், திட்டங்கள் வெறுமனே நிதி ஒதுக்கீடுகளாக நிலைத்திருக்காமல், அவை எதிர்பார்க்கப்படும் சமூக மற்றும் பொருளாதார பயன்களை உருவாக்கும் வகையில் வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், தொழிற்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், கட்டடங்கள் திணைக்களத்தின் மேலதிக மாகாணப் பணிப்பாளர், மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்

No comments