Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். கலைத்தூது அழகியல் கல்லூரியில் 'சித்திர முத்திரைகள்' கண்காட்சி


திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது  அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் ' சித்திர முத்திரைகள்' என்னும் ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி நாளை  வெள்ளிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை  நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம்,டேவிற் வீதி, இல.128 இல் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் இக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

கலைத்தூது அழகியல் கல்லூரியில்  சித்திரப்  பாடத்தையும் ஏனைய நுண்கலைக் பாடங்களையும் பயில்கின்ற மாணவர்களது ஆற்றல்களை வெளிக்கொணரும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டு  வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்ற இக்கண்காட்சி இம்முறையுடன் பத்தாவது  தடவையாக இடம்பெறுகின்றது.  

இக்கண்காட்சியில் அயல் பாடசாலைகளில் சித்திர பாடத்தைப் பயில்கின்ற மாணவர்களது ஓவிய,கைவினைப் பொருட்களும் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

'சித்திர முத்திரைகள்' கண்காட்சியினை நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஓவியரும்,சங்கானைபிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருமான சர்மலா அமிதாயன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார்

No comments