Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்ப்பாணத்தில் 'குவியம் விருதுகள்': இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களுக்குக் கௌரவம்


ஐந்தாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'குவியம் விருதுகள்' நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை பிற்பகல் 02 மணி முதல் யாழ். நகர மத்தியில் அமைந்துள்ள ஜெப்னா சிற்றி ஹோட்டலில் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் நடாத்தப்படும் இந்த விருது விழாவில், இம்முறை காணொளிப்பாடல்கள், குறும்படங்கள், நடுத்தர நீளத்திரைப்படங்கள் (Pilot films), திரைப்படங்கள் என 04 பிரிவுகளின் கீழ் மொத்தமாக 48 விருதுகளும் சிறப்பு விருதுகள் சிலவும் வழங்கப்படவுள்ளன. 

குவியம் விருதுகளில் ஆண்டு தோறும் மூத்த சினிமா கலைஞர் ஒருவரை பாராட்டி கௌரவித்து ‘வாழ்நாள் சாதனையாளர்‘ விருது வழங்கப்படுகின்றது. அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘தீ‘ (1979) திரைப்படம் முதல் கடந்த வருடம் வெளியான ‘தீப்பந்தம்‘ திரைப்படம் வரை நடித்துக்கொண்டிருக்கும் மூத்த நடிகர் ஏழுமலைப்பிள்ளை அந்த கௌரவத்தைப் பெறுகின்றார்.

அது மட்டுமல்லாது எமது சினிமா துறையில் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் சிரேஸ்ட கலைஞர்கள் ஐவரை தெரிவு செய்து ஆண்டு தோறும் கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் இம்முறை நடிகை சாந்தனா, இசையமைப்பாளர் பூவன் மதீசன், நடிகர் ஆதி திரு, இயக்குனர் காரை சிவநேசன் மற்றும் நடிகர் வசந்தசீலன் ஆகியோர் அந்த கௌரவத்தை பெறுகின்றனர்.

ஸீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகா நடிகை‘ ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் சேர்த்த நடிகை நிவேதிகா ராசையா மற்றும் அண்மையில் நாடளாவிய ரீதியில் வெளியாகிய ‘கூத்தாடி‘ திரைப்படத்தில் 12 வேடங்களில் நடித்து அசத்திய செல்வின் தாஸ் (அவுஸ்ரேலியா) ஆகியோரும் சிறப்பு கௌரவங்களைப் பெறுகின்றனர்.

சம காலத்தில் இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெறும் ஒரேயொரு தமிழ் சினிமா விருது வழங்கும் விழா “குவியம் விருதுகள்” என்பதுடன், இந்த நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து தமிழ் சினிமா கலைஞர்கள். சினிமா ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ள நிலையில்,  விருது வழங்களுடன் இடம்பெறும் கலை நிகழ்வுகளில் நம் நாட்டின் முன்னணி கலைஞர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

No comments