Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.பேருந்து நிலைய நெரிசலால் வர்த்தகம் பாதிப்பு: ஆளுநரைச் சந்தித்துப் பேசிய வணிகர் கழகம்!


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் அதிகரித்துள்ள நெரிசல் மற்றும் தனியார் பேருந்துச் சேவைகளால் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக வணிகர் கழகப் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் முறையிட்டுள்ளனர்.

ஆளுநருக்கும் யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் பராமரிப்பின்மை, மலசலகூடங்களின் மோசமான நிலைமை, இரவு வேளைகளில் இடம்பெறும் சமூகவிரோதச் செயற்பாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் வணிகர் கழகப் பிரதிநிதிகள் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

 இவ்விடயங்கள் தொடர்பில் பலமுறை முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.

மேலும், கடைகளின் உரிம மாற்ற நடவடிக்கைகளில் காணப்படும் தாமதத்தைச் சுட்டிக்காட்டியவர்கள், அதனை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோரினர். 

எதிர்காலத்தில் வாடகை மீள்நிர்ணயம் செய்யப்படும்போது உரிம மாற்றச் செயன்முறையிலும் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதையும் எடுத்துரைத்தனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் அதிகரித்துள்ள நெரிசல் மற்றும் தனியார் பேருந்துச் சேவைகளால் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படுவது தொடர்பிலும் வணிகர் கழகப் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

வணிகர் கழகத்தினரின் கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட ஆளுநர், விரைவில் நவீன சந்தைக் கட்டடத் தொகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு, பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் மற்றும் பிரத்தியேகச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்

No comments