மன்னார் வைத்தியசாலையில் மூளைச்சாவடைந்த குடும்பஸ்தரின் உறுப்பு தானத்தினால் இருவர் தமது புதிய வாழ்வை பெற்றுள்ளனர்
மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 41 வயதுடைய நபர் , சிகிச்சை பலனின்றி மூளை சாவடைந்தார்,. அது தொடர்பில் வைத்தியர்கள் அறிக்கையிட்ட நிலையில் குறித்த நபரின் உறவினர்கள், மூளை சாவடைந்தவரின் உறுப்புக்களை தானம் செய்ய சம்மதித்தனர்
அதனை தொடர்ந்து விசேட மருத்துவ குழாமினால் , மூளை சாவடைந்தவரின் இரு சிறுநீரகங்களும் தானமாக பெறப்பட்டு , சிறுநீர் அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம் அஸாத்தின் தலைமையில், சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் எஸ்.தர்சன், வைத்தியர் அன்ரூ நிசாந்தன் தலைமையிலான இரத்த நாள சத்திர சிகிச்சை நிபுணர் குழு ஆகிய மன்னார் , யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வைத்திய சாலை வைத்தியர் குழாமின் பங்களிப்புடன் குறித்த சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









No comments