Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். சமையல் கலைஞரான பெண் படுகொலை - காதல் உறவா கரணம் ?


யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கத்தியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த பின்னர், அப்பெண்ணின் தாயையும்  கத்தியால் வெட்டி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

கோவில் வீதியில் உள்ள வீடொன்றினில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு அத்துமீறி நுழைத்த இளைஞன் வீட்டில் இருந்த ஒரு பிள்ளையின் தாயான பெண் மீது சரமாரியாக கத்தியால், வெட்டியதுடன் , பெண்ணின் தலைமுடிகளையும் கத்தியால் அறுத்து தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்

அதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் தாயார் மீதும் இளைஞன் கத்தியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டதில் , தாயார் படுகாயமடைந்த நிலையில்  , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பி சென்று அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதம் முன் பாய்ந்து உயிரை மாய்ந்துள்ளான்

குறித்த சம்பவத்தில், சமையல் கலைஞரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆன் லக்ஷா இக்னேஷியஸ் (வயது 32) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

அப்பெண்ணை படுகொலை செய்த பின்னர் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்தவர் கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியை சேர்ந்த தேவதாஸ் புகழரசன் (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். 

கொலையான பெண் சமையல் கலைஞராக வேலை செய்யும் , யாழில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் குறித்த இளைஞனும் சமையல் கலைஞர் படிப்பினை நிறைவு செய்து பயிற்சி சமையல் கலைஞனாக வேலை செய்து வந்துள்ளார்கள். 

இருவருக்கும் இடையில் காதல் விவாகரம் இருந்து இருக்கலாம் என்றும் , அதன் அடிப்படையில் கொலை நடைபெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

அந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் சோதனைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர். 

அதேவேளை உயிரிழந்த பெண்ணின் கணவன் கடந்த 2021ஆம் ஆண்டு தனது உயிரை மாய்த்துள்ள நிலையில் பெண் மறுமணம் செய்யாது தனது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 











No comments