மக்களுக்குக் கேடு விளைவிக்கும் மற்றும் சமூகச் சீரழிவை ஏற்படுத்தும் இவ்வாறான மதுபானசாலைகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் மிகத் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் நான்கு இடங்களில் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பது தொடர்பில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் மிகவும் தெளிவாகக் கூறுகின்றோம்; சட்டவிரோதமாக அல்லது உரிய விதிமுறைகளுக்குப் புறம்பான முறையில் அமைக்கப்பட்ட மதுபானசாலைகள் இருக்குமாயின், அவை உடனடியாக இழுத்து மூடப்பட வேண்டும். அதற்குத் தேவையான சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும்.
இந்த பிரச்சினை தொடர்பாக தெல்லிப்பழையில் இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கூட எமது உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மக்களுடன் நின்றார்கள்.
மக்களுக்குக் கேடு விளைவிக்கும் மற்றும் சமூகச் சீரழிவை ஏற்படுத்தும் இவ்வாறான மதுபானசாலைகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் மிகத் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என தெரிவித்தார்.









No comments