Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சிறைச்சாலைகளை நிரப்புவதால் மாத்திரம் போதைப்பொருளை ஒழிக்க முடியாது - நாமல்


இலங்கையின் சிறைச்சாலைகள் நரகத்தைப் போன்று காணப்படுவதாகவும், அங்கு கைதிகளுக்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் நிம்மதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளைகளை பார்க்க  முடியாமல் கவலையுடன்உள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில், கைதுகளைத் தீவிரப்படுத்தி சிறைச்சாலைகளை நிரப்புவதால் மாத்திரம் நாட்டில் போதைப்பொருள் பாவனையையும் வர்த்தகத்தையும் ஒழிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று   உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்தை ஒழிப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைக் கைது செய்து விளக்கமறியலில் வைப்பதற்குப் பதிலாக அவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, அதிகமானவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதை அரசாங்கம் தனது வெற்றியாகக் கருதக்கூடாது.

நாட்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. ஆனால் சமூகத்தில் போதைப்பொருள் பாவனை குறைவடைந்துள்ளதா?

அதேபோன்று அதிகளவிலான துப்பாக்கிகள் கைப்பற்றப்படுவதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் நாட்டில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளனவா?

இவற்றைக் கருத்திற்கொள்ளும்போது போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்றே கூற வேண்டும்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகுகளில் கைது செய்யப்பட்ட பலர் வருடக்கணக்கில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த வர்த்தகத்தின் பின்னணியில் உள்ள பிரதான நபர்கள் சிறைகளில் இருப்பதில்லை.

மக்களைச் சிறைகளில் அடைப்பதை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு சட்டங்கள் கொண்டுவரப்படுமாயின், அவற்றின் மூலம் எதிர்பார்க்கப்படும் வெற்றியை அடைய முடியாது.

குறிப்பாக ஞானசார தேரர், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் குறித்தும் புலனாய்வு அதிகாரிகளைப் பாதுகாப்பது குறித்தும் வெளியிட்ட கருத்துகளுடன் தொடர்புடைய நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதேவேளை, பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்திற்குப் பொய்யான தகவல்களை வழங்கியதாகவும் மக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்தத் தீர்ப்பை மதிக்காத பொலிஸ்மா அதிபருக்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பதையும் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்" எனத் தெரிவித்தார்.

No comments