Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நேர்வேயில் வீதி போக்குவரத்துப் பாதுகாப்பு மாநாடு - கிளிநொச்சி ரோட்டரி கழகத்தினர் பங்கேற்பு


வளர்ச்சியடைந்த நாடுகளில் மேற்கொள்ளப்படுவது போன்ற வீதிப் பாதுகாப்பு முயற்சிகளை இலங்கையிலும் முன்னெடுக்கும் வகையில், கிளிநொச்சி ரோட்டரி கழகத்தின் Transport Safety Academy நிறுவப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கிளிநொச்சி ரோட்டரி கழக உறுப்பினர்கள் நோர்வேயின் பேர்கன் நகருக்கு அண்மையில் சென்றிருந்தனர். 

அங்கு Western Norway University இல் வீதி மற்றும் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற மாநாட்டிலும் கலந்துகொண்டனர். 

அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான , யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவிக்கையில், 

இந்தப் பயணம், வீதிப் பாதுகாப்புத் துறையில் நோர்வேயின் அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் அறிந்துகொள்வதற்கும், அவற்றிலிருந்து இலங்கைக்குப் பொருத்தமான அணுகுமுறைகளை அடையாளம் காண்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

வீதி விபத்துகள் தவிர்க்க முடியாதவை அல்ல. சரியான திட்டமிடல், பாதுகாப்பான வீதிக் கட்டமைப்பு, தரமான வாகனங்கள், பொறுப்பான வாகனப் பயன்பாடு மற்றும் ஒவ்வொரு வீதிப் பயனாளரினதும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் அவற்றைக் கணிசமாகக் குறைக்க முடியும். 

ஒரு உயிரைக் காப்பாற்றுவது என்பது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதாகும் 

ஒரு விபத்தைத் தடுப்பது என்பது உயிரிழப்பு, அங்கவீனம் மற்றும் பொருளாதார இழப்பு ஆகிய அனைத்தையும் தடுப்பதாகும்.

எனவே, அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி அமைப்புகள், பொலிஸார், சுகாதார மற்றும் கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகள், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து வீதிப் பாதுகாப்பை ஒரு தேசிய முன்னுரிமையாகவும், ஒவ்வொருவரின் பொறுப்பாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.






No comments