வடக்கில், குடிபுகு சான்றிதழ் பெற்றுக்கொள்ளாத கட்டடங்களுக்கு இலங்கை மின்சார சபையின் மின்சார இணைப்புகளை வழங்காமல் இருப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.
வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை, ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற மீளாய்வு கூட்டத்திலையே இவ்விடயம் ஆராயப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில், அரச நிறுவனங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கான கட்டடங்களுக்கு 2027ஆம் ஆண்டு முதல் குடிபுகு சான்றிதழ் கட்டாயமாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அதன் போது, குடிபுகு சான்றிதழ் பெற்ற பின்னர் வியாபார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள விஸ்தரிப்புகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும், குடிபுகு சான்றிதழ் பெற்றுக்கொள்ளாத கட்டடங்களுக்கு இலங்கை மின்சார சபையின் மின்சார இணைப்புகளை வழங்காமல் இருப்பது தொடர்பான கோரிக்கையொன்றை ஆளுநர் ஊடாக முன்வைப்பதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.





.jpeg)



No comments