Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். தொழிற்சந்தை - 1600 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளின் பங்கேற்பு


யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட தொழிற்சந்தை இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர்  கலந்துகொண்டார்.

இத் தொழிற்சந்தையின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு துறைகளில் காணப்படும் தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகள் தொடர்பில் நேரடியாக அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

குறித்த தொழிற்சந்தையில் 1600 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டதுடன், 50 தொழில் வழங்கும் நிறுவனங்களும் 12 தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்கேற்றன.

இதன்மூலம் தொழில் தேடும் இளைஞர்களையும் தொழில் வழங்கும் நிறுவனங்களையும் நேரடியாக இணைக்கும் முக்கிய தளமாக இந் நிகழ்வு அமைந்தது.

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன், மேலதிக செயலர் கே. சிவகரன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர்   கே. கருணாகரன், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்







No comments