Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அஞ்சல் திணைக்களத்தின் விசேட வியாபார மேம்படுத்தல் நிகழ்வு


இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும், திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேவைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும், யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை விசேட வியாபார மேம்படுத்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிரதம அஞ்சலக வளாகத்தில் ஆரம்பமான இந்த விசேட வியாபார மேம்படுத்தல் பவனி, யாழ்ப்பாணம் நகரின் முக்கிய பகுதிகளினூடாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அஞ்சல் திணைக்களத்தின் புதிய சேவைகள் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டதுடன், அஞ்சல் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக மக்களுக்கு விளக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் கு. செந்தில்குமார், யாழ்ப்பாணம் பிரதம அஞ்சலக உதவி அஞ்சல் அத்தியட்சகர் திருமதி சாந்தகுமாரி பிரபாகரன் உள்ளிட்ட யாழ். மாவட்ட அஞ்சல் திணைக்களப் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, அஞ்சல் திணைக்களத்தின் புதிய சேவைகளை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட வியாபார மேம்படுத்தல் நிகழ்வு, இலங்கை முழுவதும் சுமார் 30 அஞ்சல் நிலையங்களில் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது







No comments