Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கனகராஜான்குளத்தி்ல் விபத்து ; 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!



வவுனியா கனகராயன்குளம் பகுதியில் பேருந்தும்,  டிப்பரும் மோதிக்கொண்ட விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கனகராயன்குளம் பகுதியில் இன்றைய தினம்  வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும் மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் டிப்பர் வாகன சாரதி உட்பட பேருந்தில் பயணித்த பயணிகளும் காயமடைந்த நிலையில் 6பேர் மாங்குளம் வைத்தியசாலையிலும் 4பேர் வவுனியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments