Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, May 22

Pages

Breaking News

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளும் தரப்பே முன்வைத்திருக்க வேண்டும்


தற்போதைய சபாநாயகருக்கு எதிராக ஆளுந்தரப்பினராலேயே நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். 

“தற்போதைய சபாநாயகர் கடந்தகாலங்களில் நாடாளுமன்றில் எதிர்த்தரப்பினரின் கருத்துக்களுக்கு செவிமடுக்கவில்லை என்பது அவர்களின் பாரிய குற்றச்சாட்டாக காணப்பட்டது.

நாடாளுமன்றில் அவர் நடுநிலையாக செயற்படவில்லை என கூறினார்கள். ஆனால் சபாநாயகருக்கு எதிராக ஆளுந்தரப்பினரே நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்திருக்க வேண்டும்.

ஏனென்றால் கடந்த காலங்களில் நாடாளுமன்ற அமர்வுகளில் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கு அதிக கால அவகாசம் வழங்கியதுடன் எதிர்த்தரப்பினரின் கோரிக்கைகளை செவிமடுத்த சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவை தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது” என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்