Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மிருசுவிலில் எரிபொருள் தாங்கி தடம்புரள்வு - போக்குவரத்து ஸ்தம்பிதம்


யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தாங்கி விபத்துக்கு உள்ளாகி தடம் புரண்டதில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான எரிபொருள் வீதியில் கொட்டப்பட்டு நாசமாகி உள்ளது. 

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , மிருசுவில் பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை முந்தி செல்ல முற்பட்ட வேளை கட்டுப்பாட்டை இழந்த எரிபொருள் தாங்கி , வீதியில் தடம் புரண்டது. 

அதனால் , வீதி முழுவதும் தாங்கியில் இருந்த டீசல் வீதியில் கொட்டப்பட்டது. அவ்வேளை எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனம் வீதியில் கொட்டப்பட்ட டீசலில் சறுக்கி , டிப்பர் வாகனமும் தடம் புரண்டது 

தெய்வாதீனமாக குறித்த விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை. 

எரிபொருள் தாங்கி மற்றும் டிப்பர் வாகனங்கள் இரண்டும் , வீதியில் குறுக்கே தடம்புரண்டு காணப்பட்டமையால் , யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது. 

கனரக வாகனங்களின் உதவியுடன் தடம் புரண்ட வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு , வீதியில் கொட்டப்பட்ட டீசலின் மீது மண் பரப்பப்பட்டு , வீதியின் ஊடான போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. 

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 




No comments