யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தினுள் மதியம் 12 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு , பொதுச் சுடர் ஏற்றப்பட்டு , தொடர்ந்த தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
No comments