Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Monday, July 14

Pages

Breaking News

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு?

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 18ம் திகதி கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர்.

அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, புதிய மனு தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டது.

மேலும் அரசாங்க வேலை வழங்குவது பற்றி மத்திய மாநில அரசுகள் 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது