பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு , முள்ளியவளை பகுதியை சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி தனது 75 வயதிலும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
அவர், 1500m ஓட்டம் மற்றும் 5000m விரைவு நடை ஆகிய இரு போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை பெற்றதுடன் , 800m ஓட்டம் போட்டியில் வெங்கலப் பதக்கத்தினை பெற்றுக்கொண்டார்.
அதேவேளை 5000m ஓட்டம் போட்டியில் நான்காம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த காலங்களிலும் இலங்கை மாத்திரமின்றி சர்வதேச ரீதியில் சர்வதேச நாடுகளில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.