Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். 34 பயனாளிகளுக்கு வாழ்க்கைக்கான வலிமை வீட்டு திட்டம்


"வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், வாழ்க்கைக்கான வலிமை (திவியட்ட சவிய) 20 இலட்ச ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான முதற்கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும், சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் 34 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக 23 பயனாளிகளுக்கான காசோலைகள்  வழங்கப்பட்டன.

அவர்களுக்கான முதற்கட்டமாக 4 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 16 இலட்சம் ரூபாயும் உரிய கட்டங்களில் வழங்கப்படும்.

காணி வசதி இல்லாத பயனாளிகள் காணியைப் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், வீடமைப்புக்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருங்கிணைப்பும் பிரதேச செயலாளர்கள் ஊடாக மாவட்டச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








No comments