இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் 58 கிலோ கஞ்சா போதைப்பொருள் பொதி ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. அதனைக் கடத்த முயன்றவர்கள் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
“இளவாலை கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று காணப்பட்டதையடுத்து கடற்படையினரால் சோதனையிடப்பட்டது.
அதில் கஞ்சா போதைப்பொருள் காணப்பட்டுள்ளது. அதனை மீட்ட கடற்படையினர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்” என்றும் பொலிஸார் கூறின