Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, July 11

Pages

Breaking News

தேங்காய் எண்ணெய் கொள்வனவு - மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை


தேங்காய் எண்ணெயை 
சந்தையில் கொள்வனவு செய்வதற்கு பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அரசாங்க. தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ,ஊடகவியலாளர் ஒருவர், சந்தையில் உள்ள தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயன கலவை கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுவதால், பொதுமக்கள் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த அச்சம் கொள்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ருவன் சத்குமார கலந்துக்கொண்டனர்.

புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயன கலவை அடங்கிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் சுங்க பகுதி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே முதல் முறையாக கண்டறியப்பட்டது. சுங்க பகுதியினால் இவ்வாறான இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விடுவிக்கப்படவில்லை. இருப்பினும் மோசடியான முறையில் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பதை கண்டறிவதற்காக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தரம் மிக்கது என்பது சர்வதேச ரீதியல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதற்கு பொது மக்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மரக்கறி எண்ணெய் என்று கூறப்படும் பாம் ஒயில் பாவனையை கட்டுப்படுத்துவதற்கா அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் தேங்காய் எண்ணெய்க்கான சுங்க வரியை அரசாங்கம் குறைத்துள்ளது. பாம் ஒயில் விற்பனையில் ஈடுப்பட்டுள்ளவர்களே தற்பொழுது இந்த பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர் என்றும்அமைச்சர் தெரிவித்தார்.

புற்றுநோய் காரணிகள் அடங்கியுள்ள தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்யப்பட்டமைக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படவிருக்கிறது. 

பாம் ஒயில் உற்பத்தியை நிறுத்துவதற்கு தற்பொழுது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்தார்.